2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

மூவின மாணவர்களையும் ஜனாதிபதி அவரது பிள்ளைகளாகவே கருதுகின்றார்: மத்திய மாகாண முதலமைச்சர்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 16 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

சிங்களம், தமிழ், முஸ்லிம் ஆகிய மூவினத்தைச்  சார்ந்த மாணவர்களையும் ஜனாதிபதி அவரது பிள்ளைகளாகவே கருதுகின்றார். எனவே நாமும் இன்று அதன் அடிப்படையிலேயே செயல்படுகின்றோமென்று மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா தெரிவித்தார்.

கண்டி வத்துகாமம் கல்வி வலயத்தை சேர்ந்த அத்தரபல்ல வித்தியாலயத்தில் புதிய கணினிக் கூடத்தை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்,

2010ஆம் ஆண்டு வத்துகாமம் கல்வி வலயத்திற்கு கணினிக் கூடம் வழங்கும் திட்டத்தில் இது முதலாவது கணினிக் கூடமாகும். அப்படியென்றால் 167 மாணவர்கள் மற்றும் கல்வி கற்கும் ஒரு சிறிய பாடசாலைக்கே நாம் முதலிடம் கொடுத்துள்ளோம்.
மத்திய மாகாணத்திலுள்ள  ஆண் பாடசாலை, பெண் பாடசாலை, தமிழ் பாடசாலை, முஸ்லிம் பாடசாலை , சிங்களப் பாடசாலை என்ற எவ்வகையான பேதமும் இன்றி அப்பாடசாலைகளுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆசியாவின் ஆச்சரியம் மிக்க நாடாக இலங்கை மாறும்போது மத்திய மாகாணசபைப் பிரிவிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும்  சமூகத்திற்குப் பொருத்தமான மாணவர்களை உருவாக்கும் பணியை பூர்த்திசெய்திருக்கும். நாம் சிறிய பாடசாலை, பெரிய பாடசாலை எனப் பார்ப்பதில்லை. 167 மாணர்களைக் கொண்ட அத்தரகல்லை வித்தியாலயத்திற்கு 30 இலட்ச ரூபாய் பெறுமதியான கணினிக் கூடமொன்றை வழங்கியுள்ளோம் என்றார்.

கணினித்துறை சம்பந்தமான கண்காட்சியொன்றும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--