Super User / 2010 டிசெம்பர் 08 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நபீலா ஹுஸைன்)
அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் சுட்டிக்காட்டியதைப் போன்று, பெருந்தோட்டப் பகுதிகளில் வறுமை நிலை குறையவில்லை எனவும் மாறாக அது அதிகரித்துள்ளது எனவும் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
'வரவுசெலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. நாட்டின் வருமானத்திற்கு அவர்கள் முக்கிய பங்காற்றியுள்ளதால் அவர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும்' எனவும் அச்சங்கம் கூறியுள்ளது.
'தோட்டத் தொழிலாளர்களுக்கு திருப்திகரமான சம்பளம் கிடைக்கவிட்டால் நாம் தீவிர நடவடிக்கை மேற்கொள்வோம் என அகில இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். என்ன நடவடிக்கை மேற்கொள்வது என்பது எதிர்வரும் மார்ச் மாதம் பூர்த்தியாகவுள்ள சம்பள உடன்படிக்கையில் தங்கியுள்ளது எனவும் அவர் கூறினார்.
தோட்டப்பகுதிகளில் வறுமை நிலை குறைந்துள்ளதாக ஜனாதிபதி கூறியபோது தோட்டப் புற மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் அமைச்சர்கள் தொண்டமான், திகாம்பரம் ஆகியோர் எதுவும் கூறவில்லை.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 285 ரூபாவே சம்பளமாகக் கிடைக்கிறது. தற்போதைய வாழ்க்கைச் செலவு உயர்ந்துள்ளதால் இச்சம்பளம் ஒருவரின் செலவுக்குக்கூட போதாது.
பெருந்தோட்டப் பகுதிகளானவை நிவாரணம் அளிக்கப்பட வேண்டி பகுதிகள் என்பதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால் வரவுசெலவுத் திட்டத்தில் எதுவும் அவர்களுக்கு அளிக்கப்படவில்லை' என ராமலிங்கம் சந்திரசேகரன் மேலும் தெரிவித்தார்.
23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025