2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

கண்டியில் ஆயுதங்கள் மீட்பு

Super User   / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக், சி.எம்.ரிஃபாத்))

கண்டி அங்கும்புறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டப்புவ எனும் காட்டுப் பிரதேசத்தில் பொலிஸார் நேற்று சனிக்கிழமை இரவு நடத்திய தேடுதலின் போது கற்பாறை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை ஆயுதங்களை கண்டெடுத்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களுள் இரண்டு அதி சக்தி வாய்ந்த குண்டுகள், ஒரு சயனைட்வில்லை, அதி சக்தி வாய்ந்த ரி.என்.ரி. ரக வெடிப்பொருட்கள் ரி.56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படத்தப்படும் 50 தோட்டாக்களும் அடங்கும்.

நேற்று மாலை இப்பிரதேசத்திலிருந்து கண்டெக்கப்பட்ட குண்டு ஒன்றை தொடர்ந்து நடத்திய தேடுதலின் போதே பொலிஸார் இவ்வாயுதங்களை கண்டெடுத்துள்ளனர்.

இக்காட்டுப் பகுதியில் மேலும் ஆயுதங்கள் மறைத்து வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கும் பொலிஸார் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.

அங்கும்புறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித இலங்கசேகர தலமையிலான குழு மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .