2025 ஜூலை 12, சனிக்கிழமை

நோர்வூட்டில் தொண்டமானின் பெயரை விற்பனை செய்த மூவர் கைது

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 15 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சௌமியமூர்த்தி தொண்டமான் நிதியத்தின் பெயரில்  பாடநெறிகளை நடத்துவதாகவும் அதன் மூலம் வேலை வாய்ப்புக்களை பெற்றுத்தரவதாகவும் கூறி நிதி வசூலிப்பில் ஈடுபட்ட வேலைவாய்ப்பு முகவர் நிலைய முகாமையாளர் ஒருவர் உட்பட மூன்று சந்தேகநபர்களை நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த நிதி வசூலிப்பு நடவடிக்கைக்காக ஆறுமுகம் தொண்டமானின் புகைப்படமொன்று பொறிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மேற்படி பாடநெறியினைப் பின்பற்றுவதற்காகவும் அதன் மூலம் வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்வதற்காகவும் ஒருவரிடமிருந்து தலா 500 ரூபா முதல் 25,000 ரூபா வரையில் நிதி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். (LD)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .