2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

முன்பள்ளி ஆசிரியைகளுக்கான திறந்த பல்கலை பாடநெறி ஹட்டனில் ஆரம்பம்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான திறந்த பல்கலைக்கழக கல்விப்பீடத்தின் முன்பிள்ளைப்பருவ மற்றும் முன்பள்ளி ஆசிரியர் பயிற்சி பாடநெறியின் ஆரம்ப வைபவம் ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் நாளை 18ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இவ்வைபவத்தில் பிரதம அதிதிகளாக கொழும்பு சமூக விஞ்ஞான பீடம் தலைவர் கலாநிதி சந்திரபோஸ், திறந்த பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் தனராஜ், சிரேஸ்ட விரிவுரையாளரும் இலங்கை திறந்த பல்கலைக்கழக கல்விப்பீடத்தின் முன்பிள்ளைபருவ மற்றும் ஆரம்ப கல்வித்துறையின் தலைவர் முகுந்தன், பிரிடோ நிறுவனத்தின் தலைவர் மைக்கல் ஜோக்கிம், வெளிக்கள இணைப்பாளர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.  இந்நிகழ்ச்சி தொடர்பாளராக சிரேஸ்ட விரிவுரையாளர் முகுந்தன் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--