2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

கொழும்புக்கும் - பண்டாரவளைக்கும் விசேட நகர்சேர் கடுகதி ரயில் சேவை

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

கொழும்புக்கும் பண்டாரவளைக்கும் இடையில் கடந்த 11 ஆம் திகதி முதல் இன்டர்சிட்டி விசேட ரயில் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்த ரயில் சேவை எதிர்வரும் ஜனவரி இரண்டாம் திகதி முதல் இடம்பெறவுள்ளது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் காலை 8.35 மணிக்கு புறப்படுகின்ற இந்த ரயில் பண்டாரவளை ரயில் நிலையத்தினை பிற்பகல் 4.10 க்கு வந்தடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் பின்பு இந்த ரயில் மறுதினம் காலை 6.40 க்கு பண்டாரவளையில் புறப்பட்டு பிற்பகல் 2.20 க்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தினை வந்தடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்டர்சிட்டி விசேட ரயில் பொல்காவலை ,பேராதனை ,கம்பளை ,நாவலப்பிட்டி ,அட்டன் ,நானுஓயா ,அப்புத்தளை ,பண்டாரவளை ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படுகின்றது. இந்த ரயிலில் பயணிப்பதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாச பயணிகள் மிகுந்த ஆர்வம் செலுத்துகின்றனர்.

கடந்த 11 ஆம் திகதி முதல் சேவையில் ஈடுபடுகின்ற இந்த ரயில் இம்மாதம் 21, 23, 25, 27, 31 ஆகியன தினங்களில் கொழும்பிலிருந்து பண்டாரவளைக்கும் இம்மாதம் 22, 24, 26, 28, 30 ஆகிய திகதிகளிலும் ஜனவரி மாதம் 2ஆம் திகதியும்  பண்டாரவளையிலிருந்து கொழும்புக்கும் சேவையில் ஈடுபடவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--