Super User / 2011 ஜனவரி 13 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எப்.எம். தாஹிர்)
பதுளை, பசறை பாடசாலையொன்றில் 13 ஆம் ஆண்டில் கல்வி கற்ற கான்சனா மனோஹரியின் கொலை தொடர்பான குற்றம் சுமத்தப்பட்ட ஒருவருக்கு ஊவா மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
2007.08.19 ஆம் திகதி இக்கொலை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. பசறை லுனுகல பிரதேசத்தில் கள உத்தியோகத்தராக கடமையாற்றிய இசுறு சம்பத் ஜயசுந்தர என்பவருக்கு எதிராகவே மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த மூன்றரை வருடமாக ஊவா மாகாண மேல் நீதிமன்றத்தில் இடம் பெற்ற வழக்கு விசாரணையின் பின் இன்று வியாழக்கிழமை நீதிபதி ரி.விக்கிரமசிங்க குறித்த பிரதிவாதி கொலை தொடர்பில் குற்றம் ஒப்புவிக்கப்பட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
பிரதிவாதி தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணி பசில் சில்வா ஆஜராகியிருந்தார். முறைபாட்டாளர் சார்பில் அரச சட்டத்திரணி தமிதினி சில்வா ஆஜரானார்.
38 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
4 hours ago
4 hours ago