2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

ஆசிரியரின் திருமணத்திற்காக பாடசாலை விடுமுறை

Kogilavani   / 2011 ஜனவரி 21 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட கினிகத்தேனை சிங்கள மகா வித்தியாலயத்தில் கடமைப்புரியும் ஆசிரியர் ஒருவரின் திருமணத்தினை முன்னிட்டு அப் பாடசாலைக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டமைத்தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியரின் திருமணத்திற்காக இப்பாடசாலையை இன்று வெள்ளிக்கிழமை மூடுவதற்கு ஹட்டன் கல்வி வலயத்தின் மேலதிக கல்விப்பணிப்பாளர் ஒருவர் அனுமதி வழங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்விடயம் தொடர்பாக ஹட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.ரெங்கராஜியிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது ஆசிரியர் ஒருவரின் திருமணத்திற்காக பாடசாலைக்கு விடுமுறை வழங்கமுடியாது என்றும்  குறிப்பிட்ட பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்ட நாளுக்குப் பதிலாக பிறிதொரு நாளில் பாடசாலையை நடத்துவதற்கு பாடசாலையின் அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X