Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜனவரி 25 , மு.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி மஹியங்கனை வீதியை புனர் நிர்மாணம் செய்யும் முகமாக அவ்வீதியை தற்காலிகமாக மூடிவிடுவதற்கு அதிகாரிகள் எடுத்த முடிவுக்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
கண்டி மெததும்பறை பிரதேசத்திலிருந்து ஹசலக வரை 72 கிராம அதிகாரி பிரிவுகளில் வாழும் மக்கள் குறித்த வீதியை மூடியதால் பாதிப்படைந்துள்ளதாகவும் 17 கிலோமீற்றர் தூரம் வரையான பயணத்தை 160 கிலோமீற்றர் தூரம் வரை பயணிக்க வேண்டியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களின் வேண்டுகோளை செவிமடுத்த அதிகாரிகள், மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரையும் பகல் 12 மணியிலிருந்து ஒரு மணி வரையும் 36 ஆசனங்களை கொண்ட பஸ் வண்டிகள் மட்டும் பயணிக்க அனுமதி வழங்கினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
11 minute ago
18 minute ago