2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

யுவதியை ஏமாற்றி தங்க ஆபரணங்களை அபகரித்த குடும்பஸ்தர் கைது

Super User   / 2011 பெப்ரவரி 19 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

திருமணம் செய்துகொள்வதாக யுவதி ஒருவரை ஏமாற்றி, அவரிடம் இருந்து இரண்டு இலட்சத்து பத்தாயிரத்து நூற்று ஐம்பது ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களை அபகரித்ததாக கூறப்படும் குடும்பஸ்தர் ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் பல வருடங்களாக குறிப்பிட்ட யுவதியுடன் தொடர்பு வைத்திருந்துள்ளதாகவும் அவரை திருமனம் செய்வதாக ஏமாற்றி அவருடைய தங்க நகைகளை அபகரித்து ஈடுவைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.
 
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கண்டி பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யவுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .