2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

பாலியல் வல்லுறவு முயற்சி; மாத்தளை பிரதேச செயலாளருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 22 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

ஆபாசக் காட்சிகளை காண்பித்து பாடசாலை மாணவர்கள் இருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்தான சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட மாத்தளை பிரதேச செயலாளரை எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தளை பிரதான நீதவான் செல்வி சதுரிகாத சில்வா உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, மாத்தளை பிரதான நீதவான் செல்வி சதுரிகாத சில்வா இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

கடந்த சுதந்திர தினத்தன்று குறித்த மாணவர்கள் இருவருக்கும் ஆபாச காட்சிகளை காண்பித்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்த பிரதேச செயலாளர்  செய்ய முயற்சித்ததாக மாத்தளை பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனையடுத்தே, சந்தேக நபரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--