Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 22 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சீ.எம்.ரிஃபாத்)
ஒலிபெருக்கிகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த மத்திய மாகாண சபையின் மாதாந்த கூட்டம் மார்ச் மாதம் 8ஆம் திகதிக்கு சபையின் தலைவரால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண சபையின் மாதாந்தக் கூட்டம் கண்டி பள்ளேகலையில் அமைந்துள்ள மத்திய மாகாணசபை மண்டபத்தில் தலைவர் சாலிய திஸாநாயக்க தலைமையில் கூடியபோது, சபை அமர்வில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் சஞ்ஜீவ கவிரத்ன உரையாற்ற முற்பட்ட வேளையில் ஒலிவாங்கி செயலிழந்ததுடன், உறுப்பினரின் உரைக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கியிலிருந்து இரைச்சலும் ஏற்பட்டது.
ஒலிவாங்கிகளைத் திருத்துவதற்கான தொழில்நுட்பவியலாளர் இல்லாத காரணத்தினால் அந்த பணியில் தாமதம் நிலவியது.
இதனைக் கவனத்தில் கொண்ட சபைத் தலைவர் மீண்டும் சபையைக் கூட்டி, இன்றைய கூட்டத்தை அடுத்த மாதம் 8ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
41 minute ago
2 hours ago
6 hours ago
31 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
2 hours ago
6 hours ago
31 Oct 2025