2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

பதுளை கின்ரூஸ் தமிழ் வித்தியாலயத்தின் நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2011 பெப்ரவரி 24 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம். தாஹிர்)

பதுளை கின்ரூஸ் தமிழ் வித்தியாலயத்தின் நிர்வாக சீர்கேடுக்கு எதிராக மாணவர்களின்  பெற்றோர்கள் இன்று காலை பதுளை ஹாலிஎல கோட்ட கல்வி காரியாலயத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

இப் பாடசாலையில் பல்வேறு ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாகவும்,  பாடசாலையின் அதிபர் நிருவாகத்தை முறை கேடாக கொண்டு நடாத்துவதாகவும்,  பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் போசாக்கு உணவு முறையாக வழங்கப்படாமையை கண்டித்தும் பெற்றோர்கள் இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அதிபரை உடனடியாக இடமாற்ற கோரியும்,  அரசாங்க நிதியை மோசடி செய்யாதே,  பிள்ளைகளின் கல்வியுடன் விளையாடாதே போன்ற கோஷங்களை  எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--