2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

பிரசார மண்டபம் வழங்க மறுப்பு; ஐ.தே.க. ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 04 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி பாத்ததும்பறைப் பிரதேசசபைத் தேர்தலில் போட்டியிடும் ஐ.தே.க. வேட்பாளர்களின் கொள்கை விளக்கப் பிரகடனத்தை வெளியிட அனுமதி பெற்றிருந்த பொல்கொல்லை கூட்டுறவு கல்லூரி மண்டபத்தை கடைசி நேரத்தில் வழங்க மறுத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க உட்பட ஆதரவாளர்கள் பாதையோரத்திலிருந்து ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.

ஐ.தே.க.வின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தலைமையில் இன்று  வெள்ளிக்கிழமை காலை இக்கூட்டம் நடைபெறுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்ட பொல்கொல்லை கூட்டுறவு கல்லூரி மண்டபத்திற்கு 14,500 ரூபாய் கட்டுப்பணம் செலுத்தியிருந்தபோதிலும், மேலிடத்து உத்தரவொன்றுக்கமைய அரச கட்டிடமொன்றை அரசியல் நோக்கிற்காகப் பயன்படுத்த முடியாதெனக் கூறி இதனை தடை செய்ததாக திஸ்ஸ அத்தநாயக்க இங்கு தெரிவித்தார்.

வேட்பாளர்களின் கொள்கை விளக்கப் பிரகடனத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றிய திஸ்ஸ அத்தநாயக்க,
அரசாங்கம் தாராளமாக அரச வளங்களைப் பயன்படுத்தும் அதேவேளை, நாம் பணம் செலுத்தியும் அதனை அடைய முடியாதவாறு தடுக்கப்படுவது  பாரிய  ஜனநாயக உரிமை மீறலாகும் என்று கூறினார்.

மஹிந்த சிந்தனையில் கூறியவற்றை நிறைவேற்ற முடியாத அரசு எழுத்து மூலம் நாம் வழங்கும் உறுதிமொழியைப் பொதுமக்களுக்கு சென்றடையாதவாறு தடுப்பதற்காக எடுத்த  ஒரு செயல் இது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--