Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 08 , மு.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
ஜப்பான் வாகனங்கள் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி செய்த சந்தேக நபருக்கு குருணாகலை நீதிமன்ற நீதவான் புத்திக சீ.ராகல பத்து இலட்சத்து பத்தாயிரம் ரூபாய் பிணையில் செல்வதற்கு அனுமதியளித்தார்.
ஜப்பான் வாகனங்கள் பெற்றுத்தருவதாக கூறி பல இலட்சக்கணக்கான ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட மேற்படி சந்தேக நபர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். களனி பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவரே இந்த நிதி மோசடியி;ல் ஈடுபட்டுள்ளார்.
மேற்படி சந்தேக நபர் மோசடி செய்த பணத்தை தவணை அடிப்படையில் வழங்குவதற்கு ஒத்துக்கொண்டதையடுத்தே, இவருக்கு பிணை வழங்கப்பட்டது.
எதிர்வரும் ஜுன் மாதம் 06ஆம் திகதிக்கு முன்னதாக பணத்தை கட்டுமாறும் இதன்போது அவருக்கு உத்தரவிடப்பட்டது.
16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025