Menaka Mookandi / 2011 ஏப்ரல் 12 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
21 வயதுடைய இளைஞர் ஒருவரின் சடலமொன்றினை நாவலப்பிட்டி, கொரக்க ஓயா, சமகிபுர பாலத்துக்கு அருகிலிருந்து பொதுமக்களின் தகவலுக்கேற்ப பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
நாவலப்பிட்டி நகரிலுள்ள சிகையலங்கார நிலையமொன்றில் தொழில் புரிகின்ற சமகிபுர கிராமத்தைச் சேர்ந்த மிராஜ் அல்விஸ் என்ற இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் கடந்த 9ஆம் திகதி திருமண வீடொன்றுக்குச் சென்றதாகவும் அங்கு இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்து கொண்டவர் மீண்டும் வீட்டுக்குத் திரும்பவில்லை எனவும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து அவரின் வீட்டார் அவரைப் பல இடங்களில் தேடிய போதும் அவரைப்பற்றி தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று 11ஆம் திகதி பொதுமக்கள் குறிப்பிட்ட இளைஞனின் சடலத்தினை சமகிபுர பாதையோரமாகவுள்ள பாலமொன்றுக்கு அருகில் கண்டு அது பற்றி நாவலப்பிட்டி பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
அதன் பின்பு சடலத்தினை மீட்ட பொலிஸார் நாவலபபிட்டி வைத்தியசாலையில் ஒப்படைத்ததையடுத்து பிரேத பரிசோதனை நடைபெற்றது. இந்தச் சம்பவம் தொடர்பில் கம்பளை உதவி பொலிஸ் அத்தியட்சகர் விமலதாச தலைமையிலான பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
54 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
2 hours ago