2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

பாராட்டு வைபவம்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 16 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

தற்போதைய பிரதமர் டி.எம்.ஜயரட்ன கடந்த 2004ஆம் ஆண்டு மலையக அபிவிருத்தி அமைச்சராக இருந்தபோது மேற்கொண்ட பச்சை இல்ல (கிறீன் ஹவுஸ்) செயற்பாடு இன்று  வெற்றியளித்துள்ளமைக்காக நுவரெலியா மாவட்ட மக்கள் நன்றி தெரிவித்து பாராட்டு வைபவமொன்றை நடத்தினர்.

 'ரிப்லெக்ட் புலோரா' நிறுவனம் நடத்திய 7ஆவது வருட வைபவத்தில் பிரதமரின் பாரியார் அனுலா யாப்பா ஜயரட்ன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

ரிப்லெக்ட் புலோரா' நிறுவனத்தின் தலைவி கே.எம்.திஸாநாயக்காவிடமிருந்து பிரதமர் சார்பாக பிரதமரின் பாரியார் பரிசினை பெற்றுக்கொண்டார்;. நுரெலியா மாவட்டச் செயலாளர் கே.பி.ஜி.குமாரசிறியும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--