2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

'தேசபற்று என்ற போர்வையில் அரசாங்கம் தேசத்தின் சொத்துகளை சூறையாடுகிறது'

Kogilavani   / 2011 ஜூலை 17 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

தேசபற்று என்ற போர்வையில் அரசாங்கம் தேசத்தின் சொத்துகளை சூறையாடுகிறது என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அக்குறணை துனுவிலை, புளுகொஹொதென்ணை பிரதேசங்களில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற ஐ.தே.கவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் தெரிவிக்கையில்,

நாங்கள் தேசப் பற்று என்று கூறுவது நாட்டை நேசிப்பதற்கு. ஆனால் அரசாங்கத்தினர் தேசப் பற்று என்று கூறுவது நாட்டின் சொத்துகள் முலம் பணம் தேடுவதற்கு. ஹெஜிங் ஒப்பந்தம் மூலம் ஒரு சிலர் பணம் தேடியுள்ளனர். அவர்களுக்கு அந்த பணம் 10 தலைமுறைகளுக்கு போதுமானது. நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் மூலம் தேடிய பணம் 25 தலைமுறைக்கு போதுமானது.

கோல்பேஸில் காணி விற்கப்பட்டது. அதை வாங்கிய தனியார் நிறுவனம் பணத்தில் ஒரு பகுதியை மட்டுமே வழங்கியது. இராணுவ தலைமையகத்தை அமைப்பதற்கு காணியை விற்றாலும் தற்போது அதற்கு பணம் போதாத நிலை ஏற்பட்டுள்ளது காணியும் இல்லை இராணுவ தலமையகமும் இல்லை.

இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம். எத்தனை வாகனங்களுக்கு பெற்றோலக்கு பதிலாக தண்ணீரை ஊற்றியுள்ளனர். அவை அனைத்திலும் நஷ்டத்தை பொது மக்கள் செலுத்த வேண்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X