2021 மே 06, வியாழக்கிழமை

மத்திய மாகாணத்திலுள்ள சிறிய நீர்விநியோகத் திட்டங்களை பாதுகாக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 19 , மு.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து சிறிய நீர்விநியோகத் திட்டங்களையும் பாதுகாத்து மக்களுக்கு முறையான நீர்விநியோகத்தை  வழங்க மாகாணசபை திட்டமிட்டுள்ளதாக மத்திய மாகாணசபையின் உறுப்பினரும் ஹாரிஸ்பத்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக்  கட்சி அங்கத்தவருமான எதிரிவீர வீரவர்தன தெரிவித்துள்ளார்.

கண்டி யஹலதென்ன கிரீன் வீவ் ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சிறிய நீர்விநியோகத் திட்டங்கள் சம்பந்தமாக அதிகாரிகளுடனும் பொதுமக்களுடனும் கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

தேசிய நீர்விநியோக சபையினால் நீர்விநியோகம் செய்யும்போது சிறிய நீர்விநியோகத் திட்டங்கள் அமுல்படுத்தப்படுமெனவும் எதிரிவீர வீரவர்தன குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .