2021 மே 18, செவ்வாய்க்கிழமை

பல்கலை மாணவர்களுக்கான முயற்சியான்னை, நிர்வாக அபிவிருத்திக்கான தலைமைத்துவ பயிற்சி ஆரம்பம்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 28 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹிர்)

நாட்டிலுள்ள பல்கலைகழகங்களில் கல்வி பயிலும் சிரேஷ;ட மாணவர்களுக்கான முயற்சியான்மை மற்றும் நிர்வாக அபிவிருத்தி தொடர்பான தலைமைத்துவ பயிற்சி நெறி ஊவா வெல்லஸ்ஸ பல்கலைகழகத்தில் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்கவினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த பயிற்சிநெறி தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. இந்த பயிற்சி நெறியில் 500 சிரேஷ;ட பல்கலைகழக மாணவர்கள் பங்கு கொள்கின்றனர். 2, 3, 4 வருடங்களில் கல்வி பயிலும் சிரேஷ;ட மாணவர்கள் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை பதுளை ஊவா வெல்லஸ்ஸ பல்கலைகழகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டு அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க உரையாற்றுவதையும், கலந்து கொண்ட மாணவர்களையும் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .