2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

மகனை அடித்து துன்புறுத்திய தந்தை கைது

Super User   / 2011 ஒக்டோபர் 04 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுரங்க ராஜநாயக்க)

எட்டு வயதான தனது மகனை அடித்து காயப்படுத்திய குற்றச்சாட்டில், நான்கு பிள்ளைகளின் தந்தையொருவரை  நாவலப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேற்படி நபர் தனது மகனை பெல்ட்டினால் அடித்து சுடுநீரை ஊற்றியதாக தெரிவிக்கப்படுவதாகவும் அயலவர்களிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து அந்நபர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பிள்ளைகளின் ஒழுக்கத்திற்காக அவர்களை பெற்றோர்கள் அடிக்காமல் வேறு யார் அடிக்க முடியும் என இச்சந்தேக நபர் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட இச்சிறுவனுக்கு உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பிரதேச வாசிகள் பல்வேறு பரிசுப் பொருட்களை அன்பளிப்புச் செய்தனர்.
 


  Comments - 0

 • KLM Tuesday, 04 October 2011 07:23 PM

  தமது பிள்ளைகளை எப்படி வேண்டுமானாலும் அடிக்க தமக்கு உரிமை உள்ளது என பல பெற்றோர்கள் தவறாக எண்ணுகின்றனர்.

  Reply : 0       0

  meenavan Tuesday, 04 October 2011 10:07 PM

  கோழி மிதித்து குஞ்சு சாகாது படித்தது, கலியுகத்தில் தந்தை என்றால் பெல்டினால் அடித்து சுடுநீர் ஊற்றுவார்?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X