2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

நாவலப்பிட்டியில் பெண் தபாலதிபர் கொலை; கணவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 11 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம்.ரம்ஸீன்)

நாவலப்பிட்டி கலபொடை தோட்டத்தில்  பெண் தபாலதிபர் ஒருவர் கொலை  செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட அவரின் கணவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நாவலப்பிட்டி நீதவான் பூர்ணிமா கமகே உத்தரவிட்டார்.

கலபொடை தோட்டத்தில் தாபலதிபராக கடமையாற்றி வந்த   பிசோ மெனிகே கடந்த 29ஆம் திகதி இரவு அவரின் வீட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கொலை செய்யப்பட்ட பெண் தபாலதிபரின் கணவரை கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபர் கொழும்பிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் பணி புரிந்தவரெனவும் இவர் ஏற்கெனவே திருமணமாகி  இரு பிள்ளைகளின் தந்தையாவாரெனவும் பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உதய விக்கிரமசேகர தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--