2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் பரிசோதகர் கடமையிலிருந்து இடைநிறுத்தம்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 18 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.எம்.ஃபாத்)

பெண் பொலிஸ் கான்ஸ்டபிளொருவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் கண்டி பொலிஸ் நிலைய மோசடி தடுப்புப்பிரிவு பொலிஸ் பரிசோதகரொருவர் கண்டி பொலிஸ் தலைமையகத்தினால் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

கண்டி பொலிஸ் தலைமையக உயரதிகாரிகளிடம் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் செய்த முறைப்பாட்டையடுத்தே இவர் நேற்று வியாழக்கிழமையிலிருந்து கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டதாக கண்டி பொலிஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

கண்டி குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸார் தற்போது இவரை கைதுசெய்து கண்டி நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X