2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

மோசடி செய்த முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு விளக்கமறியல்

Super User   / 2011 நவம்பர் 19 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம். ரம்ஸீன்)

கண்டி, சிலாபம் மற்றும் நீர்கொழும்பு பகுதிகளிலுள்ள பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்காக போலி ஆவணங்களை காண்பித்து சுமார் மூன்று மில்லியன் ரூபா பண மோசடி செய்த முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதவான் உத்தரவிட்டார்.

வீரவில பகுதியை சேர்ந்த குறித்த சந்தேகநபர் 2012ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு பிரபல பாடசாலைகளில் மாணவர்களுக்கான அனுமதியினை பெற்றுத் தருவதாக பெற்றோரை ஆசை காட்டி ஏமாற்றியுள்ளதாக பொலிஸ் விசாரனைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இவர் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த போது பொலிஸ் சேவையிலிருந்து விலகியதாக விசாரனைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் விசேட பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X