2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

கடும் மழையினால் பொகவந்தலாவையில் வீடுகள் சேதம்

A.P.Mathan   / 2011 நவம்பர் 25 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரஞ்சன்)

பொகவந்தலாவை பெத்தராசி தோட்டப் பகுதியில் இன்று பகல் வீசிய கடும் காற்று காரணமாக பெத்தராசி தோட்டத்தின் ஃப்ரீட்லன்ட் பிரிவில் உள்ள ஐந்து வீடுகளின் கூரைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன.

இவ் வீடுகளில் தங்கியிருந்தவர்கள் ஃப்ரீட்லன்ட் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போதும் கடும் மழை இப்பகுதியில் பெய்து வருவதோடு கடும் குளிரும் நிலவுகின்றது.

தாழ்நிலங்களில் நீர் தேங்கி நிற்பதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு பொகவந்தலாவை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .