2021 ஜனவரி 16, சனிக்கிழமை

பலாங்கொடை, நுவரெலியாவில் மண்சரிவு

Kogilavani   / 2012 நவம்பர் 16 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலாங்கொடை மற்றும் நுவரெலியாவில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மண்சரிவை அடுத்து அந்த பிரதேசங்களில் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

மண்சரிவோடு பாரிய கற்களும் சரிந்து வீதியின் நடுவில் வீழ்ந்துள்ளதால் அவற்றை துரிதமாக அப்புறப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அந்நிலையம் அறிவித்துள்ளது.

ஹட்டன் நுவரெலியா வீதியில் பங்களாவத்த என்னும் இடத்திலும் பலாங்கொடை கல்தொட்ட வீதியில் பெல்லங்கள எனும் இடத்திலும்  பாரிய மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் அவ்வீதியினூடான போக்குவரத்தில் ஈடுபடவேண்டாமெனவும் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் பிரதேச செயலாளர்கள் அறிவித்துள்ளனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .