2021 ஜனவரி 27, புதன்கிழமை

கற்பாறை சரிவு: போக்குவரத்து பாதிப்பு

Kogilavani   / 2012 நவம்பர் 17 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                              (எஸ்.சுவர்ணஸ்ரீ)
நுவரெலியா – நானுஓயா பிரதான பாதையில் பங்களாவத்தை பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட கற்பாறை சரிவினால் இந்தப் பாதையின் ஊடான வாகனப் போக்குவரத்துகளுக்கு தடையேற்பட்டுள்ளன.

கற்பாறைகளை அகற்றும் பணிகளில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஊழியர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

நுவரெலியா – ஹட்டன் பிரதான பாதையின் செப்பனிடும் பணிகள் இடம்பெறுவதாலும் சீரற்ற கால நிலையினாலும் இந்தப் பிரதேசத்தில் கற்பாறைகள் மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டு வாகன போக்கவரத்துக்களுக்கு தடையேற்பட்டு வருகின்றன.

இவ்வாறு நானுஓயாவுக்கும் நுவரெலியாவுக்குமிடையில் வாகனப்போக்கு வரத்துக்களுக்குத் தடையேற்படும்போது தலவாக்கலையிலிருந்து நுவரெலியா செல்கின்றவர்கள் பூண்டுலோயா, தவலந்தென்ன வழியாக நுவரெலியாவுக்கு பயணிக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .