2021 ஜனவரி 20, புதன்கிழமை

பாதுகாப்பு அதிகாரி படுகொலை

Kanagaraj   / 2012 நவம்பர் 17 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.எம்.எம்.ரம்ஸீன்) 


கம்பளை நகரத்திலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றின் பாதுகாப்பு அதிகாரி இனந்தெரியாதோரினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் நிதிக்கம்பனியில் முன்புற பாதுகாப்பு அறையில் கடமையில் இருந்த போது இரும்புக்கதவை உடைத்துக்கொண்டு உள்ளே பிரவேசித்த சந்தேகநபர், அவரைக் கொலை செய்துவிட்டுச் சென்றுள்ளனர் என பொலிஸார் கூறினர்.

சம்பவத்தில் கம்பளை  தௌலஸ்பாகை ஹிராவுட சேர்ந்த என்.காமினி என்ற 54 வயதுடைய குடும்பஸ்தரே கொலை செய்யப்பட்டவராவார்.இன்று சனிக்கிழமை காலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் இரத்த வெள்ளத்தில் இருந்த காவலாளியை கண்ட நிறுவன ஊழியர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த கம்பளை மாவட்ட பதில் நீதவானின் உத்தரவின் பேரில் சடலம் கம்பளை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்;டுள்ளது. இச்சம்பவத்தில் கொலையுண்டவரின் உடலில் பல இடங்களிலும் வெட்டுக்காயங்களும் தாக்கப்பட்ட காயங்களும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.  

இக்கொலைச் சம்பவம் நடைபெற்ற இடத்தில் பல தடயப்பொருட்கள் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இக்கொலைச் சம்பவம் தொடர்பான விசாரனைகள் கம்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சாலிய ஜயவீர தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .