2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

Kanagaraj   / 2012 டிசெம்பர் 18 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீரற்ற காலநிலை, வெள்ளப்பெருக்கு,மண்சரிவு மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதித்துள்ளன.

கொழும்பு – பதுளை ரயில் சேவைகள் நானு ஓயாவிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையில் இடிந்து வீழ்ந்திருந்த மண்மேட்டுக்குள் ரயில் இயந்திரம் சிக்கியதால் அந்த ரயில் தடம் புரண்டுள்ளது.

இதனால் கொழும்பு மற்றும் கண்டியிலிருந்து பதுளை நோக்கி பயணிக்கும் ரயில சேவைகள் நானுஓயா ரயில் நிலையத்திற்கும். பதுளையிலிருந்து கொழும்பை நோக்கி பயணிக்கும் ரயில் சேவைகள் அப்புத்தளை ரயில் நிலையத்திற்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .