2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது: முத்துசிவலிங்கம்

Kogilavani   / 2013 ஜனவரி 02 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.தியாகு)
சில அதிகாரிகள் தான்தோன்றித் தனமாக நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது...

தமிழ் மொழி அமுலாக்கம் தொடர்பாக அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்ற இந்த வேளையில் சில அதிகாரிகள் தான்தோன்றித் தனமாக நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பொருளாதார பிரதி அமைச்சருமான முத்துசிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகளிலும் தனியார் போக்குவரத்து பேருந்துகளிலும் முறையாக தமிழ் மொழி அமுலாக்கப்படுவதில்லை.  இது தொடர்பாக நான் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.  இதனை எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

நுவரெலியா பிரதேசங்களில் சேவையில் ஈடுபட்டள்ள பேரூந்துகளிலேயே நாம் இந்த குறைகளை அதிகம் காண்கின்றோம். அம்பாறை பொலன்னறுவை போன்ற பகுதிகளில் இருந்து சேவையில் ஈடுபடும் பேரூந்துகளில் இரண்டு மொழிகளிலும் தெளிவாக எழுதப்பட்டுள்ளதை நாம் காண்கின்றோம்.

அப்படியானால் ஏன் மற்ற போக்குவரத்து சபைகளில் இதனை செய்ய முடியாது. இதனை வேண்டுமென்றே அதிகாரிகள் செய்கின்றனர். இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு நான் பின்னிற்க மாட்டேன். எனவே இதனை உடனடியாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

நான் இந்த விடயம் தொடர்பாக மொழி அமுலாக்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து அவர் இது தொடர்பாக உடன் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.  ஆனால் தற்பொழுது இது மீண்டும் பழைய நிலைக்கு சென்றுள்ளது. இது தொடருமானால் இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்படும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .