2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

பத்தனையில் லொறி விபத்து: சாரதி படுகாயம்

Kanagaraj   / 2013 ஜூலை 23 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஞ்சன்

திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுண்டவேர்ணன் பகுதியில் இன்று திங்கட்கிழமை பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த சாரதி கொட்டகலை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அட்டன் குடாகம பகுதயில் இருந்து பத்தனை இராவணாங்கொடை பகுதிக்கு பாதை திருத்த வேலைகளுக்காக மெட்டல் கற்களை ஏற்றி சென்ற டிப்பர் லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

எதிரே வந்த வாகனம் ஒன்றுக்கு இடம் கொடுக்க வாகனத்தை பாதையில் ஒதுக்கியபோது பாதையை விட்டு விலகி லொறி விபத்துக்குள்ளாகியுள்ளதாக திம்புள்ள  - பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான் லொறி சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளதுடன் விபத்தின் போது சாரதி மட்டுமே வாகனத்தில் இருந்துள்ளார். என்று தெரிவித்த இ பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--