2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

சுயதொழிலாளர்களுக்கு பசுக் கன்றுகள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2013 ஜூலை 24 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


அவுஸ்திரேலியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கறவை இன பசுக்களின் கன்றுகளை 50 சுயத்தொழில் பயனாளிகளுக்கு கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர்  ஆறுமுகன் தொண்டமான் வழங்கி வைத்தார்.

தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பிரஜாசக்தி, நவசக்தி செயற்திட்டத்தின் கீழ் நுவரெலியா அம்பகமுவ பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கே கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

பெருந்தோட்ட தொழிலாளர்கள், இளைஞர், யுவதிகள் சுயதொழில் மூலம் தங்களின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் அண்மையில் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர் ஆர்.எம்.பி.எல்லேகல, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ராம், ரமேஸ், தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் உயர் அதிகாரிகள், மற்றும் கலந்துகொண்ட ஒரு பகுதியினரையும் இங்கு காணலாம்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X