2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

ஹட்டனில் நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2013 ஜூலை 28 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}-ஆர்.ராஜேஸ்வரன்


அம்பகமுவை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களுக்கான நடமாடும் சேவையொன்று ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இம்மக்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொடுக்கும் முகமாக பவ்ரல் அமைப்பு இந்நடமாடும் சேவையை ஏற்பாடு செய்தது.

இதுவரை அடையாள அட்டை பெறாதவர்கள், அடையாள அட்டையை தொலைத்தவர்கள், அடையாள அட்டைய  புதுப்பிக்கவுள்ளவர்களென அதிகளவானோர் இந்நடமாடும் சேவையின் மூலம் பயனடைந்துள்ளனர்.

மேலும், பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் இல்லாதவர்களுக்கு அதனை பெற்றுக்கொள்வதற்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.

இந்நடமாடும் சேவையில் ஆட்பதிவுத் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், கிராம சேவகர்கள் தமது சேவைகளை வழங்கினர்.

இந்நடமாடும் சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை நோர்வூட் தமிழ் மாகா வித்தியாலத்திலும்  நடைபெறும்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--