2025 ஜூலை 03, வியாழக்கிழமை

ஜ.ம.மு.யில் மூன்று இளம் வேட்பாளர்கள்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயக மக்கள் முன்னணி மூன்று இளம் வேட்பாளர்கள் மலையகத்தில் களம் இறக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்கமைவாக, ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து யானை சின்னத்தில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் முன்னணி, கண்டி மாவட்டத்தில் வேலு குமார் என்பவரையும் நுவரெலிய மாவட்டத்தில் ராஜ்குமார் மற்றும் சந்திரகுமார் ஆகிய மூன்று படித்த இளைஞர்களையும் வேட்பாளர்களாக களம் இறக்கியுள்ளது.

இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள செய்தி அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
'கட்சி தலைவர் மனோ கணேசனின் நேரடி முன்னெடுப்பாக மேற்படி மூவரையும் தமது கட்சி மலையகத்தில் களம் இறக்கியுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பட்டதாரியும், தற்போது கண்டி நகரில் கணக்கீடு, வணிக கல்வி ஆசிரியராக பணியாற்றுபவருமான  வேலு குமார் ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட வேட்பாளராக யானை சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

மஸ்கெலிய புனித. ஜோசப் கல்லூரியில் பயின்று கணினித்துறை கற்கை நெறியை கற்றவரும் தற்போது அம்பகமுவ பிரதேச சபையில் ஜ.ம.மு.யின் உறுப்பினராக பணியாற்றிவருபவரான ராஜ்குமார் மற்றும் பேராதெனிய பல்கலைக்கழக வெளிவாரி கலை பட்டதாரியும் சிறிபாத கல்வியியல் கல்லூரியின் தேசிய கற்பித்தல் டிப்ளோமா கற்கைநெறியை பயின்றவரும், தற்போது சமூக விஞ்ஞான ஆசிரியராக பணியாற்றிவருபவரான சந்திரகுமார் ஆகிய இருவரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் நுவரெலியா மாவட்ட  வேட்பாளர்களாக யானை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்' என தெரிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .