2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

மின் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 04 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ராஜேஸ்வரன்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெராயா ஹென்போல்ட் தோட்டப் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்விளைஞர் மின்சாரக் கம்பியில்  சிக்கி நேற்று சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவித்த லிந்துலை பொலிஸார், இன்று ஞாயிற்றுக்கிழமை காலையே இச்சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

ஹென்போல்ட் தோட்டத்தில் தேயிலை செய்யப்பட்டிருந்த இடத்தில் அண்மைக்காலமாக குத்தகை அடிப்படையில் மரக்கறிச் செய்கை பண்ணப்பட்டு வருகின்றது. இம்மரக்கறிச் செய்கையை  மிருகங்களிடமிருந்து  பாதுகாப்பதற்காக இடப்பட்டிருந்த மின்சாரக் கம்பியிலேயே இவ்விளைஞர்  சிக்கி உயிரிழந்துள்ளார்.

சடலம் கருகிய நிலையில் உள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

ஹென்போல்ட் தோட்டப் பகுதியை சேர்ந்த வடிவேல் சிவகுமார் (வயது 23) என்ற  இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான விசாரணையை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X