2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

வட்டவளை பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியது

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 05 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ராஜேஸ்வரன்


நுவரெலியா மாவட்டத்தின் பல இடங்களிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பெய்த அடை மழைக் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்புற்றுள்ளது.

ஹட்டன், நோர்வூட், மஸ்கெலியா, பொகவந்தலாவை, வட்டவளை பகுதிகளில் பெய்த அடை மழை காரணமாக பல இடங்கள் வெள்ளக்காடாகின.

குறிப்பாக வட்டவளை பகுதியின் பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீரில் முழ்கின.

இதேவேளை தலவாக்கலை, நானுஓயா மற்றும் நுவரெலியா,கந்தபளை பகுதிகளிலும் கடும் மழைபெய்தது.

ஞாயிறு சந்தைகள் பல மழைக் காரணமாக இயங்கவில்லை. நகர்ப்புறங்களிலும் மக்கள் செறிவு மிகவும் குறைவாகவே காணப்பட்டது.

இதேவேளை ஹட்டன் பகுதியில் பெய்த அடை மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது.

ஒரு சில இடங்களில் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு கருதி வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--