2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

தனியார் தோட்டத் தொழிலாளர் பிரச்சினை; அமைச்சர் காமினிக்கு ராதா எம்.பி. கடிதம்

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 05 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.தியாகு

தனியார் தோட்டங்களில் தொழில் புரியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வேதன அதிகரிப்பு வழங்கப்படுவதில்லையெனவும், இவர்களுக்கு வேதன அதிகரிப்பு வழங்க தொழில் அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணி அரசியற்துறை தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன், தொழில் அமைச்சர் காமினி லொக்குகேவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இது குறித்து சுட்டிக்காட்டி அமைச்சர் காமினி லொக்குகேவுக்கு இராதாகிருஷ்ணன் எம்.பி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
 
'தனியாருக்கு சொந்தமான பெருந்தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு வேதன அதிகரிப்பு வழங்கப்படாமல் தொடர்ந்தும் 380 ரூபாய் சம்பளம் வழ    ங்கப்படுவதால், இத்தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டடுள்ளனர்.

எனவே, இந்த விடயங்களை கருத்திற்கொண்டு அவர்களுக்கு வேதன அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க தாங்கள் தொழில் அமைச்சர் என்ற வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்வதோடு, 2013 ஏப்ரல் மாதம் முதல் இந்த அதிகரித்த வேதனம் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்பதையும் தாங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

இந்த விடயம் தொடர்பாக நாம் மாவட்ட தொழில் ஆணையாளர்களின் கவனத்திற்குகொண்டு வந்த போதும், அவர்கள் தொழில் அமைச்சு அரசாங்க வர்த்தமானி மூலமோ, சுற்றறிக்கை மூலமோ குறித்த விடயம் தொடர்பாக எவ்வித அறிவுறுத்தலும் வழங்கவில்லை எனவும், இது தொடர்பாக தொழில் அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் கூறுகின்றனர்.

இந்த தனியார் தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்களின் விடயங்கள் தொடர்பாக கூட்டு ஒப்பந்தத்தில் எந்த விடயமும் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. எனவே, பெருந்தோட்ட கம்பனிகளின் கீழ் தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் 515 ரூபாய் நாளாந்த சம்பளம் இவர்களுக்கும் வழங்க தொழில் அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மேலும் இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--