2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு; பொகவந்தலாவயில் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}பொகவந்தலாவ, கெர்க்கஸ்வோல்ட் எல்பட மேல்பிரிவு தோட்டத்தில்  இடம்பெற்றுவரும் சட்டவிரோதமான மாணிக்க கல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அத்தோட்ட மக்கள் இன்று திங்கட்கிழமை (21) ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
 
குறித்த தோட்டப் பகுதியில் சட்டவிரோதமான மாணிக்கல் அகழ்வு இடம்பெற்று வருகின்றமையால் அத்தோட்டத்தின் தேயிலைச் செடிகள் சேதமாக்கப்படுவதாக தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தோட்ட முகாமையாளர் டி.வென்மதிராஜா நோர்வூட் காவல்துறையினர் ஆகியோர் வருகை தந்து மக்களோடு கலந்துரையாடி சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுபடுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் குறித்த தோட்டபகுதியில்  பாதுகாப்பு பலப்படுத்த இருப்பதாகவும் நோர்வூட் தெரிவித்தனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--