2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளில் சர்வதேச இயக்கங்கள்: ஹக்கீம்

Super User   / 2013 ஒக்டோபர் 26 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பின்னால் சர்வதேச இயக்கங்கள் சில உள்ளன என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் உவைஸ் ஹாஜியாரின் அலுவலகம் இன்று சனிக்கிழமை கண்டியில் திறந்துவைக்கப்பட்டது. இந்த திறப்பு விழா நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இலங்கையில் யுத்தம் முடிவுற்ற பின் தற்போது முஸ்லிம்கள் மத்தியில் சில பிரச்சினைகள்; கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
இதில் எவ்வித பிரயோசனமும் இல்லை. ஆனாலும் மக்கள் மத்தியில் இவ்வாறான நெருக்கடிகளை உருவாக்குவதில் சிலர் மும்முரமாக உள்ளனர்.

எனக்கு தெரிந்த வகையில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் இயக்கங்களுக்கு பின்னால் சில சர்வதேச சக்திகள் செயற்படுகின்றன. யுத்தம் முடிவடைந்த பின் நாட்டில் அமைதி நிலவுகின்றதை சகிக்காத சில சக்திகள் நாட்டில் மீண்டும் அமைதியின்மையை உருவாக்குவதற்கு இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன.

ஹலாலுக்கு எதிராக என்று கூறி முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுகின்றனர். நாங்கள் பல நூற்றாண்டுகளாக ஒற்றுமையாக வாழ்கின்றோம். எங்கள் மத்தியில் ஏதேனும் சந்தேகங்கள் தோன்றினால் எங்களுக்கு பேசி தீர்த்துக்கொள்ள முடியும். அதனை விட்டுவிட்டு அதிரடியாக செயற்படுவது கவலைக்குரியவிடயமாகும். இதனால் நாட்டுக்கும் நாட்டின் அரசாங்கத்திற்கும் சர்வதேச மட்டத்தில் அபகீர்த்தி ஏற்படும்.

ஜனாதிபதி இந்த நிலையை புரிந்து கொண்டு வெகுவிரைவில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்றிப்புள்ளி வைப்பார் என நாங்கள் நம்புகின்றோம்.ஏனென்றால் இவ்வாறான செயற்பாடுகளினால் முஸ்லிம்களது மனம் வெகுவாக நொந்துள்ளது. கடந்த மாகாண சபை தேர்த்லின் போது இது நன்றாக பிரதிபலித்தது" என்றார்.

You May Also Like

  Comments - 0

  • VALLARASU.COM Saturday, 26 October 2013 10:42 AM

    வந்துட்டாருயா முஸ்லிங்களின் உரிமை குரல். அமைச்சு பதவி கொடுக்கும் போது அமரிக்கா, திவினெகும வாக்களிப்பின் போது அவுஸ்திரேலியா, ஹலால் பிரச்சினையின் போது மலேசியா, பள்ளிகள் உடைக்கும் போது பாக்கிஸ்தான். இப்போ கட்சி காரியாலயம் திறக்கும் போது முஸ்லிம்களின் உரிமை குரல்..!!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .