2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை

அக்குறணை பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டம் நிறைவேற்றம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

அக்குறணை பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் இன்று வியாழக்கிழமை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அக்குறணை பிரதேச சபையின் தலைவர் ஏ.எம்.எம்.சிம்சான் முன்வைத்த 2014ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின்படி, அடுத்த வருடத்தில் எதிர்பார்க்கப்படும் மொத்த வருமானம்  05 கோடியே 52 இலட்சத்து 4,850  ரூபா ஆகும்.

2014ஆம் ஆண்டில் மொத்த செலவினமாக  05 கோடியே 51 இலட்சத்து 75,760 ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.

அலவத்துகொடை ஜானக வரவேற்பு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற விசேட பொதுக் கூட்டத்தில் தலைவர் ஏ.ஏ.எம்.சிம்சான் முன்வைத்த 2014ஆம் ஆண்டுக்கான  வரவு - செலவுத் திட்டத்தை உபதலைவர் அமரஜிவ இந்திரகுமார முன்மொழிந்து எதிர்க்கட்சித் தலைவர் அஜ்மிர் பாரூக் வழிமொழிந்து  எதிர்ப்புகள் இன்றியும் வாக்கெடுப்பின்றியும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--