2021 மார்ச் 08, திங்கட்கிழமை

ஜெனீவாவுக்கெதிராக கண்டியில் ஆர்ப்பாட்டம்

Kanagaraj   / 2014 மார்ச் 26 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸி

இலங்கைக்கு எதிராக ஜெனீவா மனித உரிமை ஆனைக்குழுவில் கொண்டுவரப்பட்டுள்ள மனித உரிமை மீறல் சம்பந்தமான பிரேரனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டியில் பேரணியும், ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன் சத்தியாகிரகம் ஒன்றும் இன்று (26) இடம்பெற்றது.

கண்டி நகர மத்தியில் இருந்து இன்று மாலை 4 மணி அளவில் ஆரம்பமான பேரணியில் நூற்றுக்கணக்கான பௌதத் தேரர்கள் உட்பட பொது மக்களும் கலந்து கொண்டனர். இவர்கள் 4.30 மணி  அளவில் ஸ்ரீ தலதா மாளிகையை அடைந்ததுடன் அங்கு சத்தியா கிரக போராட்டத்தில் பங்கேற்றனர்.

மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, கண்டி நகர பிதா மஹேந்திர ரத்வத்த, கண்டி மாவட்டசெயலாளர் காமினி செனெவிரத்ன உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .