2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

'கொழும்பு வாழ் தமிழ் வாக்காளர்கள் பாடம் புகட்டியுள்ளனர்'

Kogilavani   / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.தியாகு

'தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களிடம் வந்து பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வெற்றிபெற நினைப்பவர்களுக்கு கொழும்பு வாழ் தமிழ் வாக்காளர்கள் உரிய பாடம் புகட்டியுள்ளனர்'  என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறை தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

'நடைபெற்று முடிந்த மேல்மாகாண சபைத்தேர்தலில் சந்தர்ப்பவாத அரசியலுக்கின்றி உண்மையான அரசியல் வாதிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் வாக்களித்து வெற்றி பெறச்செய்தமையானது வரவேற்கக்கூடிய விடயமாகும்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'முழுநேர வர்த்தகர்களாகவும் பகுதி நேர அரசியல் வாதிகளாகவும் செயற்பட்டவர்கள்     இந்த     தேர்தலில் தோற்கடிக்கப்பட்டிருப்பதானது மக்கள் சிந்தித்து வாக்களித்திருப்பதை  எடுத்துகாட்டுகின்றது.

குறிப்பாக அற்ப சொற்ப சலுகைகளுக்காக வாக்களிக்காமல் உணர்வு பூர்வமாகவும் சிந்தித்தும் தன்மானத்துடனும் வாக்களித்திருப்பது பாராட்டுக்குறியது.

எதிர்வரும் காலங்களில் மலையகத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களில் மலையக மக்களும் இவ்வாறு சிந்தித்து உண்மையானவர்களை     இணங்கண்டு வாக்களிப்பார்களானால் எமது மக்களின் பிரச்சினைகளும் வெகுவிரைவில் தீர்த்து வைக்க முடியும் என நான் எதிர்ப்பார்க்கின்றேன்.

கொழும்பை பொறுத்தவரையில் பிரதான கட்சிகளுடனும்,  பண முதலைகளுடனும் தனித்து போட்டியிட்டு தன்மானத்துடன் இரண்டு ஆசனங்களை பெற்றிருப்பது பாராட்டுக்குறிய செயலாகும். எனவே எதிர்காலத்திலே வாக்களித்த மக்களுக்கு இன்னும் அதிகமான சேவைகளை செய்து மாகாண சபை உறுப்புரிமையை நாடாளுமன்ற உறுப்புரிமையாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

இந்த தேர்தலை ஒரு சிறந்த முன்னுதாரணமாகக் கொண்டு மலையக மக்களும் வாக்களிப்பார்களானால் அது எமது சமூகத்தின் மத்தியில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் என்பது யாராலும் மறுக்க முடியாது.

இதேவேளை சிறுபான்மை கட்சிகள் அனைவரும் ஓரணியில் ஒன்று திரண்டு தமது பதவிகளை மறந்து ஒன்றுபடுவதன் மூலம் பல வெற்றிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை இந்த தேர்தல் உணர்த்தியிருக்கின்றது.

வெற்றி பெற்றவர்களுடன் இணைந்து எதிர்காலத்தில் எமது மக்களுக்காக குரல் கொடுக்க நான் என்றும் தயாராக இருக்கின்றேன் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கூறி வைக்க விரும்புகின்றேன்.

அதேவேளை இந்த தேர்தலில் ஆளும் ஜக்கிய மக்கள் கூட்டமைப்பிற்கு மக்கள் மறைமுகமாக ஒரு செய்தியை கூறியிருக்கின்றார்கள் இதனை அரசாங்கம் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.இன்று மக்கள் பொருட்களின் விலையேற்றம் உட்பட இன்னும் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துவருகின்றனர் இதனையே இந்த தேர்தலில் கூறியுள்ளனர்.எனவே அரசாங்கம் இதற்கும் உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டும்.சரத் பொன்சேகா மற்றும் ஜே.வி.பி.யின் வளர்ச்சியும் வரவேற்கக்கூடியதே' என குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .