2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

இந்திய வீட்டுத்திட்டம் அனைவருக்கும் பொதுவானது: இராதாகிருஸ்ணன்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 10 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.தியாகு

மலையகத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள இந்திய வீடமைப்பு திட்டமானது அரசியல், தொழிற்சங்க பேதமின்றி பொதுவாகவே நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இந்திய தூதுவர் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையகத்தில் இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் அமைக்கப்படவுள்ள 4000 வீடுகள் தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்று இன்று (10) மாலை கொழும்பில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தில், இந்திய தூதுவர் வை.கே.சின்ஹா தலைமையில் நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஸ்ணன், பழனி திகாம்பரம், பீ.ராஜதுரை, மாகாண சபை உறுப்பினர் மனோ கணேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கடந்த சில நாட்களாக இந்திய வீடமைப்பு தொடர்பாக பல்வேறு கருத்து முரண்பாடுகளும் எதிர்ப்புகளும் ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதன் ஒரு கட்டமாகவே இன்றைய இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் குறிப்பிடுகின்றார். குறித்த ஒரு தொழிற்சங்கம் இது தொடர்பாக பெருந்தோட்ட மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை கூறிவந்த நிலையிலேயே, இந்த பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--