2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

முச்சக்கரவண்டி விபத்தில் பெண் பலி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கட்டுகஸ்தோட்டை, நுகவல பிரதேசத்தில் 400 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி விழுந்து விபத்துக்குள்ளானதில் பெண்னொருவர் பலியாகியுள்ளதுடன் அவரது கணவன் கடும் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

புது வருடத்தினை முன்னிட்டு தனது மகளின் வீட்டுக்கு சென்று முச்சக்கர வண்டியில் திரும்பி வரும் போதே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் (13) இரவு ஏற்பட்ட இந்த விபத்தில் உயிரிழந்தவர் 53 வயதுடைய டபில்யு.ஜீ. சோமலதா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--