2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

ஹட்டனில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தினக்கூட்டம்

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 25 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தினப் பேரணியும் மே தினக் கூட்டமும் ஹட்டன் நகரில் இடம்பெறவுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தினக் கூட்டம், ஹட்டன் பிரதான பஸ்தரிப்பு நிலையப் பகுதியில் காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்திற்கு முன்னதாக ஹட்டன் மல்லியப்பூ சந்தியிலிருந்து மே தினப் பேரணி காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.இராஜதுரை, மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சிங். பொன்னையா, சோ.ஸ்ரீதரன், திருமதி சரஸ்வதி சிவகுரு, பொதுச்செயலாளர் எஸ்.பிலிப், நிதிச்செயலாளர் எஸ்.செபஸ்டியன் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த மே தினக்கூட்டத்தில்  நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, பதுளை, களுத்துரை ஆகிய மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர் கலந்து கொள்ளவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--