2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

கூரை அமைத்து கொடுத்தல்: ஒப்பந்தம் திங்கள் கைச்சாத்து

Kanagaraj   / 2014 ஜூலை 03 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.தி.பெருமாள்

நான்கு பெருந்தோட்ட தொழிலாளர் குடியிருப்புகளுக்கு புதிதாக கூரை அமைத்து கொடுக்கும் வைபவம் தொடர்பில் எதிர்வரும் 7ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு டிக்கோயா கிளங்கன் விருந்தினர் விடுதியில், வேல்ட்விஷன் நிறுவனமும் டிக்கோயா மனிதவள நம்பிகை நிதியமும் இணைந்து கைசாத்திடும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

நிகழ்வில் மஸ்கெலியா மறே  தோட்ட முகாமையாளர், மவுசாகலை தோட்ட முகாமையாளர், மொக்கா தோட்ட முகாமையாளர் இவர்களுடன் இணைந்து வேல்ட்விஷன் நிறுவன முகாமையாளளர் யோகாபெரேரா, இணைப்பாளர் அருளையா,நவகுமார், மனிதவள  நம்பிக்கை  நிதியத்தின் பிராந்திய பணிப்பாளரர் நளின் டி.சில்வா ஆகியோர் கலந்துகொண்டு இத்திட்டத்திற்கு கைசாத்திடும் பணி இடம்பெறவுள்ளது.

இதற்காக வேல்ட்விஷன் நிறுவனம் சுமார் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடதக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .