2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

மாத்தளை அதிபருக்கு பிணை

Kanagaraj   / 2014 ஜூலை 04 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

மாத்தளை, இறத்தோட்டை திக்கும்புற பாடசாலையில் கல்வி கற்று வந்த மாணவன் ஒருவன் மாமரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அந்த பாடசாலையின் அதிபர்  மாத்தளை நீதவான் சம்பத் கமகேயினால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவ்வித்தியாலயத்தில் பத்தாம் ஆண்டில் கல்வி பயின்ற 15 வயதுடைய மாணவன் ஒருவன், பாடசாலை நேரத்தில் மாம்பழம் பறிப்பதற்காக மரத்திலேறிய போது மரத்திலிருந்து தவறி கீழே விழுந்து கண்டி வைத்திய சாலையில் அனுமதித்த பின் உயிரிழந்தார்.

அம் மாணவனை பாடசாலையின் அதிபரே மரத்தில் ஏற்றியதாக மாணவர்களால் முன் வைக்கப்பட்ட சாட்சியத்தின் அடிப்படையில் பாடசாலை அதிபர் சீ.பீ. ஹுலங்கமுவ சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

சந்தேகநபரான அதிபர், மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியபோது நீதவான் சம்பத் கமகே இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .