2021 மார்ச் 03, புதன்கிழமை

மலையக மக்களின் வாக்குகளை சிதையவிடக்கூடாது : இ.தொ.கா

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 03 , பி.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

'மலையக மக்களின் வாக்குகள் சிதைந்துவிடக்கூடாது. இன்று மலையகத்தில் புதிய தொழிற்சங்கங்களும் அவற்றின் கீழ் அரசியல் கட்சிகளும் உருவாகியுள்ளன. இந்த மாற்றங்களால் மலையக மக்களின் வாக்குகள் சின்னா பின்னமாக சிதைந்து மலையக சமுதாயத்தை பலவீனப்படுத்திவிடக் கூடாது என்பதில் அனைவருக்கும் அக்கறையுண்டு. இதனை இ.தொ.கா உணர்கின்றது' என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் வேங்குருசாமி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இ.தொ.கா ஆறு மாவட்டங்களில் போட்டியிடுகின்றது. இவற்றில் மூன்று மாவட்டங்களில் வெற்றிலைச் சின்னத்தில் களமிறங்கியுள்ளது. அவை நுவரெலியா, மாத்தளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களாகும். அதேவேளை, மூன்று மாவட்டங்களில் தனித்துவமாகப் போட்டியிடுகின்றது. அவை பதுளை, கேகாலை, கண்டி ஆகிய மாவட்டங்களாகும்.  

இம்மாவட்டங்களில் கணிசமான ஆதரவாளர்கள் உள்ளதுடன் இவர்களது குடும்ப அங்கத்தவர்களும் பரம்பரையாக  இ.தொ.கா.வுக்கே வாக்களித்துள்ளனர். அதனால், வாக்காளர்கள் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்கிவிடாமல் தம் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வாக்களிக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .