Sudharshini / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்திரன்
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியாவத்தை பகுதியில் மேலதிக வகுப்புக்குச் சென்று, வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவி ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில், குறித்த மாணவி படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புளியாவத்தை பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் அனுஷ்கா (வயது 10) என்ற மாணவியே இவ்வனர்த்தத்துக்கு இலக்காகியுள்ளார்.
மேற்படி மாணவி இன்று (13) பிற்பகல் மேலதிக வகுப்பு முடிந்து புளியாவத்தை-ஹட்டன் பிரதான வீதியில் நின்றுக்கொண்டிருந்த போது, சாஞ்சிமலையிலிருந்து ஹட்டன் நோக்;கிச் சென்றுக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து, குறித்த மாணவி மீது மோதியுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
7 hours ago
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
13 Dec 2025
13 Dec 2025