Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமச்சந்திரன்
'எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி அமோக வெற்றிபெரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை' என தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் அணி தலைவியும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சரஸ்வதி சிவகுரு தெரிவித்தார்.
மடக்கும்புரையில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'30 வருடங்களுக்கு மேலாக அமைச்சுப் பதவிகளை வகித்தவர்கள் மலையக மக்களுக்காக எதையுமே செய்யவில்லை. அவர்களால் செய்ய முடியாத பல செயல்களை அமைச்சர் பழனி திகாம்பரம் செய்துக்காட்டினார்.
தொழிற்சங்க ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மலையகத்திலே இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு முன்மாதிரியான செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற ஒரேயொருத் தலைவராக அவர் காணப்படுகின்றார்.
நூறுநாட்கள் வேலைத் திட்டத்தினூடாக 7 பேர்ச்சஸ் காணி, தனி வீட்டுத் திட்டம் போன்றவற்றை ஏற்;படுத்தி கொடுத்திருக்கின்றார். இத்திட்டத்தில் 400 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினூடாக மலசலக்கூடம், பாதை புனரமைப்புகள் போன்ற பல்வேறு வேலைத் திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளார்' என்றார்.
'அதேபோன்று, கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் நூறுநாட்கள் வேலைத்திட்டத்தினூடாக மலையக கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். மலையகத்தில் பல்கலைக்கழகமொன்றை அமைப்பதற்காக நாவலப்பிட்டி, கொலப்பத்தனையில் 5 ஏக்கர் காணியை ஒதுக்கியுள்ளார்.
சமூக விஞ்ஞான ஆய்வுக்கூடங்களையும் மலையகத்திலே திறந்து வைத்துள்ளார். எனவே மலையகத்தை பொறுத்தவரையில் தொழிலாளர் தேசிய முன்னணி, மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி என்பன ஒன்றிணைந்து தமிழ் முற்போக்கு கூட்டணியை உருவாக்கியுள்ளன.
இதனடிப்படையில், நுவரெலியா மாவட்டத்தில் அமைச்சர் ப.திகாம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், எம்.திலகராஜ் கொழும்பில் மனோ கணேசன், சன் குகவரதன், பதுளையில் அ.அரவிந்தகுமார், இரத்தினபுரியில் சந்திரகுமார், கண்டியில் வேலுகுமார், கம்பஹாவில் சசிக்குமார் ஆகியோர் இந்த பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் அனைவரும் வெற்றிபெற்றால் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக அமையும்' என்றார்.
59 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago